Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல தயாரிப்பாளர் மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (12:38 IST)
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் வி.ஏ. துரையின் மறைவுக்கு  நடிகர்  விஜயகாந்த் இரங்கல் கூறியுள்ளார்.
 
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்து பல படங்களை தயாரித்து விநியோகம் செய்தவர் தயாரிப்பாளர் வி.ஏ. துரை. எவர் கிரீன் மூவி இண்டர்நேஷனல் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்தியவ இவர், என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா, நாய் குட்டி, காகித கப்பல் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் உடல் குறைவால் தயாரிப்பாலர் வி.ஏ.துரை இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கஜேந்திரா பட ஹீரோவும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த்  வி.ஏ. துரையின் மறைவுக்கு இரங்கல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’உடல் நலக்குறைவால் உயிரிழந்த திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை அவர்களின் மரணத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

எனது நடிப்பில் வெளியான கஜேந்திரா உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட

அவர் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இங்கிலாந்து நாட்டு ஆங்கில மொழி முழு நீள திரைப்படம் "இன்ஃபிளுன்செர்"

ஜெ பேபி படத்தைப் பார்த்தார்களா? ஆடு ஜீவிதம் படத்துக்கு ஒரு பாராட்டுக் கூட இல்லை –ஊர்வசி ஆதங்கம்!

தனுஷுக்காகவே பிரத்யேகமான ஒரு கதையை எழுதி வருகிறேன்… லப்பர் பந்து இயக்குனர் கொடுத்த அப்டேட்!

மீண்டும் முயற்சிக்கிறோம்… விவகாரத்து முடிவைக் கைவிட்ட சாய்னா நேஹ்வால்!

சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹெச் ராஜா… ’கந்தன் மலை’ படத்தின் முதல் லுக் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments