விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
படப்பிடிப்பு நிறைவு தினத்தில், படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து போட்டோ எடுத்து, கேக் வெட்டிக் கொண்டதாகவும் தெரிகிறது. ஆனால், இது சம்பந்தப்பட்ட புகைப்படம் எதையும் வெளியிட வேண்டாம் என தயாரிப்பு தரப்புக்கு விஜய் கூறியுள்ளதாக தெரிகிறது.
அதுமட்டுமின்றி, ஜூன் 22ஆம் தேதி தனது பிறந்த நாளில் கூட, ஜனநாயகன் குறித்த எந்த அப்டேட்டும் வெளிவர வேண்டாம் என்றும் விஜய் கூறியுள்ளதாக தெரிகிறது.
இன்னும் சில மாதங்களுக்கு, முழுக்க முழுக்க அரசியல் அப்டேட் மட்டுமே வர வேண்டும் என்றும், ஜனநாயகன் ரிலீசுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மட்டும் அப்டேட்டை தந்தால் போதும் என்று விஜய் கூறியதாகவும், இதனால் படக்குழுவினர் மட்டுமின்றி ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.