Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாஸ் காட்ட ரசிகர்களை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வேண்டுமென்றே வரவைக்கிறாரா விஜய்?

மாஸ் காட்ட ரசிகர்களை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வேண்டுமென்றே வரவைக்கிறாரா விஜய்?

vinoth

, செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (07:29 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். விரைவில் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீப சில நாட்களாக அவரின் தற்போதைய படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடங்களுக்கெல்லாம் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடுவதும், அவர்கள் விஜய் செல்பி எடுத்துக் கொள்வதும் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் சார்பாக ரசிகர் மன்றங்களுக்கு வேன்றுமென்றே ஷுட்டிங் நடக்கும் இடம் பற்றிய தகவல் கசியவிடப்பட்டு வரவழைக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டதால் மாஸ் காட்ட வேண்டும் என்பதற்காக விஜய் தரப்பு இப்படி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவுண்டமணி & யோகி பாபு நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!