Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகேஷ்பாபு படத்தில் விஜய் வில்லனா?

மகேஷ்பாபு படத்தில் விஜய் வில்லனா?
, செவ்வாய், 3 அக்டோபர் 2017 (00:12 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் வரும் ஜனவரி முதல் 'விஜய் 62' படத்தை அவர் தொடங்கவுள்ளார்.



 
 
இந்த நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.முருகதாஸ், 'விரைவில் விஜய் மற்றும் மகேஷ்பாபு இருவரையும் ஒரு படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக இருவரிடமும் சம்மதம் பெற்றுவிட்டதாகவும் கூறினார்.
 
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் மகேஷ்பாபு ஹீரோ, விஜய் வில்லனாகவும், இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பில் விஜய் ஹீரோ, மகேஷ்பாபு வில்லனாகவும் நடிக்கவுள்ளனர்.
 
இந்த படம் தென்னிந்தியாவையே ஒரு கலக்கு கலக்கும் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குவீன் தெலுங்கு ரீமேக்கின் பஸ்ட்லுக் வெளியீடு