Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின்'' வாரிசு'' பட முதல் சிங்கில் ரிலீஸ் பற்றிய தகவல்

Varisu Poster
, செவ்வாய், 18 அக்டோபர் 2022 (14:57 IST)
விஜய்யின் வாரிசு படத்தின் முதல் சிங்கில் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகிறது.
 

தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில்ராஜு தயாரிப்பில் வாரிசு  என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.  இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது அடுத்தக்கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்த நிலையில் வரும் தீபாவளி பண்டியையொட்டி, வாரிசு படத்தின் முதல் சிங்கிலை வெளியிட் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே வாரிசு பட போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில்,  தீபாவளிக்கு ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கில்  வரும் அக்டோபர் 23 ஆம் தேதி மாலை யில் வாரிசு படத்தின் முதல் சிங்கிலான ரஞ்சிதமே என்ற பாடல் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இதுகுறித்து ஓரிரண்டு நாட்களில் படக்குழு அறிவிக்கலாம் என தெரிகிறது.

தமன் இசையில் உருவாகியுள்ள இப்பாடல் ஏற்கனவே இணையதளத்தில் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது.


Edited by Sinoj


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்.எஸ்.எஸ். பேரணி குறித்த திருமாவளவனின் மனு: சென்னை ஐகோர்ட் தள்ளுபடி