விஜய் டிவி பிரியங்கா கடந்த சில நாட்களுக்கு முன்னர் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அவரது கணவர் நரைத்த முடியும், நரைத்த தாடியுடன் இருப்பதை பார்த்து பலர் அவருக்கு 50 வயதுக்கு மேல் இருக்கலாம் என்று கணித்திருந்தனர்.
பிரியங்கா ஏன் ஒரு வயதானவரை திருமணம் செய்ய முடிவெடுத்தார் என்றும் பல விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், வசியின் வயது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.
இலங்கை தமிழரான வசி, சென்னையில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு வயது வெறும் 42 தான் என தெரிய வந்துள்ளது. பிரியங்காவுக்கு வயது 32 என்பதால், அவரை விட 10 வயது தான் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுவாகவே திருமணம் செய்பவர்கள் 5 முதல் 10 வயது வித்தியாசம் உள்ள நபரை திருமணம் செய்து கொள்வது தமிழகத்தில் வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் பிரியங்காவும் தனது ஜோடியை சரியாகத்தான் தேர்வு செய்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் தோற்றத்தில் தான் அவர் வயதானவர் போல் தெரிகிறார். உண்மையில் அவருக்கு 42 வயது என்பதால், பிரியங்காவுக்கு அவர் சரியான நபர்தான் என்றும், நாங்கள்தான் தவறாக நினைத்துவிட்டோம் என்றும் நெட்டிசன்கள் தற்போது கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
"40 வயதில் ஒரு திருமண வாழ்க்கையை தொடங்குவது மெச்சூரிட்டியான வாழ்க்கையாக அமையும்," என்றும் சிலர் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.