Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரி ரிலீஸில் மாஸ் காட்டிய துப்பாக்கி… ரசிகர்கள் கொண்டாட்டம்!

vinoth
வெள்ளி, 21 ஜூன் 2024 (17:19 IST)
சமீபத்தில் விஜய்யின் கில்லி திரைப்படம் ரி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரி ரிலீஸில் ஒரு படம் இவ்வளவு தொகை வசூலித்திருப்பது இதுவே முதல் முறை.

இதையடுத்து விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்தடுத்து பல படங்கள் ரி ரிலீஸாகின.  போக்கிரி மற்றும் துப்பாக்கி ஆகிய படங்கள் இன்று ரிலீஸ் ஆகின.

இதில் துப்பாக்கி திரைப்படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. சென்னையின் முக்கியத் திரையரங்குகளில் ஒன்றான வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் அந்த படத்துக்கான அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துள்ளதாக திரையரங்க நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று துப்பாக்கி படத்தை ரசிகர்கள் ஆர்வமாகக் கண்டுகளித்தனர். குறிப்பாக இடைவேளைக் காட்சியில் வரும் ஐயாம் வெயிட்டிங் வசனத்தை முதல் தடவை பார்ப்பது போல கொண்டாடித் தீர்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘கனிமா’ பூஜா ஹெக்டேவின் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான பா ரஞ்சித்!

பிரபாஸின் ராஜாசாப் படத்தில் முதியவராக சஞ்சய் தத்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

நண்பன் ரத்னகுமாருக்காக தயாரிப்பாளர் ஆகும் லோகேஷ் கனகராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments