Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரியின் கருடன் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?... வெளியான தகவல்!

vinoth
வெள்ளி, 21 ஜூன் 2024 (17:15 IST)
கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.

இதற்கிடையில் சூரி ஹீரோவாக நடித்துள்ள கருடன் என்ற திரைப்படம் மே 31 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆனது முதல் படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. இதனால் படத்தின் வசூலும் அதிகமாகி வருகிறது. இந்த படத்தில் சூரியோடு சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தது படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்தது.

இந்த படம் வெளியானதில் இருந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வசூலில் கலக்கி வருகிறது. இந்நிலையில் படம் ரிலீஸாகி இரண்டு வாரங்கள் கடந்து மூன்றாவது வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்நிலையில் இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஜூலை முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

ரி ரிலீஸில் மாஸ் காட்டிய துப்பாக்கி… ரசிகர்கள் கொண்டாட்டம்!

சூரியின் கருடன் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?... வெளியான தகவல்!

சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய்யின் கோட் பட நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments