Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளிநாட்டு உரிமையை விற்க முடியாமல் தவிக்கும் விஜய்யின் GOAT படக்குழு!

Advertiesment
தளபதி 68

vinoth

, செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:42 IST)
விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த போதிலும் இதுவரை ஓடிடி, சேட்டிலைட் மற்றும் வெளிநாட்டு உரிமை என எந்த பிஸ்னஸும் இதுவரை தொடங்கப்படவில்லையாம். ஏனென்றால் படத்துக்கு விஜய்யின் மார்க்கெட்டை விட மிக அதிக தொகையை படத் தயாரிப்பாளர்கள் நிர்ணயித்துள்ளார்களாம்.

விஜய்யின் லியோ படத்தை 60 கோடி ரூபாய் கொடுத்து ஓவர்சீஸ் உரிமையை வாங்கினவர்கள், கையை சுட்டுக் கொண்டார்களாம். அதனால் இப்போது கோட் திரைப்படத்தை அதே தொகையில் வாங்க மிகவும் தயங்குகிறார்களாம். இதனால் இன்னமும் கோட் படத்தின் எந்தவொரு பிஸ்னஸும் இன்னும் தொடங்கப்படவில்லையாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க சீமான் ஓகே சொல்ல காரணம் இதுதானா?