Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்சனுக்கு விஜய் கொடுத்த சிக்னல்… அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் படம்!

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (17:18 IST)
நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார் என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் இப்போது அந்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த பட்டியலில் பல இயக்குனர்கள் பெயர் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த இயக்குனர் யார் என்பது இப்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது விஜய் 65 இயக்குனர் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனரான நெல்சன்தான் அந்த படத்தின் இயக்குனராக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் காமெடி அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாக முழு நகைச்சுவை படத்தில் விஜய் நடிக்கவில்லை என்பதால் இந்த கதைக்கு உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

இந்நிலையில் விஜய் நெல்சனை தொடர்பு படத்துக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சொல்லி கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments