Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

84 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – இந்திய கொரோனா நிலவரம்!

84 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – இந்திய கொரோனா நிலவரம்!
, வெள்ளி, 6 நவம்பர் 2020 (09:56 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 47,639 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 84,11,724 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 670 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,24,885 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 77,65,966 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 5,20,773 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளுத்து வாங்கும் மழை.. இன்னும் வலுக்கும்! – வானிலை ஆய்வு மையம்!