Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போற போக்குல ரஜினியைக் குத்திக் காட்டிய விஜய்…!

vinoth
திங்கள், 28 அக்டோபர் 2024 (08:55 IST)
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் 48 நிமிடங்கள் உரையாற்றினார்.

வழக்கமாக தன்னுடைய மேடைப் பேச்சுகளில் மிகவும் தன்மையாக பேசும் விஜய், நேற்று அரசியல் மேடையில் ஆவேசமாக ஆர்ப்பரித்தார். தனது பேச்சில் பல அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் போற்றியும் விமர்சித்தும் பேசினார். அவரின் பேச்சு தமிழக அரசியல் சூழலில் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று அவர் பேசும்போது மறைமுகமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும் மறைமுகமாக விமர்சித்து பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது. அதில் “ சினிமாவில் நமக்கு வாழக்கைக் கொடுத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்தால் நல்லா இருக்குமா என்று யோசித்துதான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.” எனக் கூறியுள்ளார். ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் வருகை குறித்து பல ஆண்டுகளாகப் பேசி கடைசியில் அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவித்ததைதான் விஜய் மறைமுகமாகப் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்புரான் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன… சட்டசபையுல் அறிவித்த முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

குணச்சித்திர நடிகர் ரவிகுமார் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

திடீரென தள்ளிப்போன ‘இட்லி கடை’! குட் பேட் அக்லி வைப்தான் காரணமா?

அஜித்தின் 'குட் பேட் அக்லி’ டிரைலர் எப்போது? சுரேஷ் சந்திரா அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தங்கம் விலை திடீர் வீழ்ச்சி.. இன்று ஒரே நாளில் ரூ.1280 குறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments