தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இதில் விஜயின் பேச்சு ட்ரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் அவருடைய முழு பேச்சை தற்போது பார்ப்போம்.
ஒரு நாள் ரெண்டு பேரு காட்டுக்கு போனாங்கலாம். அந்த காட்டுல சிங்கம், புலி, காக்கா, கழுகுன்னு நிறைய இருந்துச்சாம். ஒருவர் முயலை பிடித்துக் கொண்டு வந்தார். இன்னொருவர் எதுவுமே பிடிக்காமல் வந்தார். ஆனால் அவர் யானைக்கு குறி வைத்திருந்தார். முயலை பிடித்து வந்தவரை விட யானைக்கு குறி வைத்தவர் தான் முக்கியமானவர். எப்போதுமே நம்ம முயற்சி பெரிதாக இருக்க வேண்டும் என்று கூறினார்
நம்மலால ஈசியா எதை ஜெயிக்க முடியுமோ, அதை ஜெயிக்குறதுல வெற்றி இல்லை, எத ஜெயிக்கவே முடியாதோ, அத முயற்சி பண்றது தான் வெற்றி. எதிர்காலத்துல என்ன நல்லது நடந்தாலும், அது நம்ம பசங்களால தான் இருக்கணும். -
20 வயசுல ஒரு பொண்ணு ஹீரோயின் ஆகுறது பெரிசில்ல.. 20 வருஷமா வெற்றிகரமா ஹீரோயினா இருக்குறதுதான் பெரிசு.. நம்ம இளவரசி குந்தவை
புரட்சி தலைவர்ன்னா ஒருத்தர் தான்
நடிகர் திலகம்ன்னா ஒருத்தர் தான்
புரட்சி கலைஞர்ன்னா ஒருத்தர் தான்
அதே மாதிரி
உலக நாயகன்னா ஒருத்தர் தான்
சூப்பர் ஸ்டார்ன்னா ஒருத்தர் தான்
தலன்னா ஒருத்தர் தான்
மாநகரம் - நம்மள பாக்க வச்சாரு
கைதி - எல்லாரையும் பாக்க வச்சாரு
மாஸ்டர் - விக்ரம் - இந்தியாவையே பாக்க வச்சாரு
இப்போ லியோ - ஹாலிவுட் மட்டும் தான் பாக்கி இருக்குன்னு நினைக்கிறேன். அவருடைய வளர்ச்சியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அட்லி, லோகேஷ், நெல்சன் எல்லாம் நம்மோட பாய்ஸ்.. அவங்களுக்கு நான் எதுவும் கைட் பண்றது இல்ல.. அவங்க தங்களோட வழியில வெற்றிகரமாக போய்க்கிட்டு இருக்காங்க என்று பேசினார். இதனையடுத்து தொகுப்பாளர் கேட்ட ஒரு வார்த்தை கேள்விக்கு விஜய் கூறிய பதில் இதோ:
கல்வி: எல்லாருக்கும் சரிசமமா கிடைக்க வேண்டிய விஷயம்
புகழ்: அர்ஜுன் சார், முதல்வன் படத்துல அவரோட பேர்
மக்கள்: புடிச்சா தட்டி கொடுப்பாங்க.. புடிக்கலைன்னா தட்டி விட்ருவாங்க
எம்ஜிஆர்: இதுவரைக்கும் தோல்வியே காணாத தலைவன்
2026: 2025க்கு அப்புறம் வர்ற வருஷம், புட்பால் வேர்ல்ட் கப்.. கப்பு முக்கியம் பிகிலு
கேள்வி: லோகேஷ் உங்க கட்சியில சேர்ந்தா, அவருக்கு என்ன பதவி கொடுப்பிங்க
தளபதி பதில்: போதைப்பொருள் தடுப்பு பிரிவு
Edited by Siva