Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஒரு குட்டிக்கதை’ பாடல் ஜெயில் காட்சியிலா? வெளிவராத தகவல்

Webdunia
வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (09:50 IST)
ஒரு குட்டிக்கதை’ பாடல் ஜெயில் காட்சியிலா?
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ’ஒரு குட்டி கதை’ என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே
 
இந்த பாடலை வரவேற்க இப்போதே விஜய் ரசிகர்கள் தயாராகி விட்டனர் என்பதும் இது குறித்த ஹேஷ்டேக் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று இந்த பாடல் குறித்து அனிருத் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இந்த பாடலின் மெட்டு குறித்த தகவலை குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஒரு அலுமினியத் தட்டில் அவர் தாளம் போடுவது போன்றும் அந்த வீடியோவில் இருந்தது. இதிலிருந்து இந்த பாடல் சிறையில் பாடும் பாடலாக இருக்கும் என கருதப்படுகிறது
 
ஏற்கனவே பல படங்களில் சிறையில் பாடல்கள் பாடும் போது கதாநாயகர்கள் அலுமினியத் தட்டில் மெட்டமைத்துதான் பாடியுள்ளனர் என்பது தெரிந்ததே. இதனால் இந்தக் இந்த பாடல் ஜெயிலில் பாடும் பாடலாக இருக்கும் என்று கருதப்படுகிறது 
 
மேலும் படக்குழுவினர்களுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்த போது இந்த பாடல் ஜெயிலில் நடக்கும் பாடல் தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனால் ஒரு சிலர் இந்த பாடல் கல்லூரி கேன்டீனில் பாடும் பாடல் போல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிவருகின்றனர். உண்மையில் இது ஜெயிலில் படமாக்கப்பட்டதா? அல்லது கல்லூரி கேண்டீனில் படமாக்கப்பட்ட பாடலா? என்பது படம் வந்த பிறகுதான் தெரியும். இருப்பினும் இந்த பாடலை விஜய்யே பாடியிருப்பதால் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்பது மட்டும் உறுதி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் மீண்டும் கதாநாயகியாகும் சமந்தா!

படையப்பா ரஜினி ஸ்டைலில் பாம்பை அசால்ட்டாக தூக்கிய சோனு சூட்! - வைரலாகும் வீடியோ!

‘வார் 2’ படத்தில் செகண்ட் ஹீரோவா ஜூனியர் என் டி ஆர்?... படக்குழு வெளியிட்ட தகவல்!

கணவரைப் பிரிகிறாரா ஹன்சிகா மோத்வானி?…ரசிகர்கள் அதிர்ச்சி!

ஸ்ரீசாந்தின் மகள் சொன்ன வார்த்தையால் நொறுங்கிவிட்டேன்… ஹர்பஜன் சிங் உருக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments