Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

27 வருடங்களில் விஜய்க்கு கிடைத்த முதல் வாய்ப்பு!

Advertiesment
27 வருடங்களில் விஜய்க்கு கிடைத்த முதல் வாய்ப்பு!
, திங்கள், 8 ஜூலை 2019 (18:59 IST)
கடந்த 1992ஆம் ஆண்டு தான் விஜய் கதாநாயகனாக நடித்த முதல் படமான 'நாளைய தீர்ப்பு' வெளியானது. அதே ஆண்டில்தான் ஏ.ஆர்.ரஹ்மான், 'ரோஜா' என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். எனவே விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் திரையுலகிற்கு வந்து 27 வருடங்கள் ஆகிவிட்டது.
 
இந்த 27 வருடங்களில் விஜய் நடித்த நான்கு படங்களுக்கு மட்டுமே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவை 'உதயம்', 'அழகிய தமிழ்மகன்' , 'மெர்சல்', சர்கார் ஆகிய திரைப்படங்கள். தற்போது ஐந்தாவதாக விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
 
இந்த நிலையில் இதுவரை விஜய் தான் நடித்த பல திரைப்படங்களில் பாடல்களை பாடியிருந்தாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மட்டும் அவர் இன்னும் ஒரு பாடல் கூட பாடியதில்லை. அந்த வாய்ப்பு தற்போது முதல்முறையாக பிகில்' படத்தின் மூலம் விஜய்க்கு கிடைத்துள்ளது
 
இன்று 'பிகில்' படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில், 'ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார் என்று குறிப்பிட்டு பாடல் ஒலிப்பதிவும்போது எடுத்த புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். இந்த செய்தி விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களுக்கு ஒரு இனிக்கும் செய்தி என்பதை சொல்லவும் வேண்டுமா?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூக்கத்திலேயே உயிரிழந்த பிரபல இளம் நடிகர் ! ரசிகர்கள் அதிர்ச்சி