Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அது ரெய்டு இல்ல: சர்வே – விஜய் சேதுபதி விளக்கம்

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (18:06 IST)
விஜய் சேதுபதி வீட்டில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இன்று விஜய் சேதுபதி அதை மறுத்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் செக்கச் சிவந்த வானம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் அவர் நடித்த 96 படம் வெளியாக இருக்கிறது . இன்று அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் பங்கேற்ற விஜய் சேதுபதியிடம் நிரூபர்கள் அவரது வீட்டில் ஐடி ரெய்டு நடந்ததது தொடர்பாக கேள்விகேட்டனர். அதுகுறித்து பதில் அளித்த அவர் ‘ அது ரெய்டு இல்ல. சர்வே என்றுதான் என்னிடம் அதிகாரிகள் கூறினர். மேலும் வரவு செலவு கணக்குகள் ஒழுங்காக உள்ளதா என சரிபார்த்தனர்’ என்று விளக்கமளித்தார்.

இதனால் உங்கள் பெயர் கெட்டுப் போகாதா என்ற கேள்விக்கு ‘அது பிரச்சைனையில்லை.  நம்மூரில் தவறான் செய்திகளே சீக்கிரம் பரவும்’ என்று கூறினார். மேலும் பத்திரிக்கையாளர்கள் துருவி துருவி கேள்வி கேட்ட போது ‘நான் பேசவில்லை என் அட்மின் பேசினார் என்று கூறுவது போல் அது என் வீடு இல்லை என் வீட்டைப் போன்ற செட் என்று நினைத்துக் கொள்ளுங்கள்’ என விளக்கமளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments