Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்ஷா ரஜினி பாணியில் விஜய் சேதுபதியின் அடுத்தபடம்!

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (13:11 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது. 


 
இன்றைய தமிழ் சினிமாவில் படு பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் இடைவிடாது நடித்து வரும் விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் சீனுராமசாமியின் இயக்கத்தில் உருவாகும் "மாமனிதன்" படத்தில் ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறாராம்.
 
வொய்.எஸ்.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படமான மாமனிதன் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் காயத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். ஜோக்கர் பட புகழ் குரு சோமசுந்தரம் விஜய் சேதுபதியின் நண்பராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆண்டிப்பட்டியில் துவங்கியது. 


 
40 நாட்கள் படப்பிடிப்பை நடத்திவிட்டு அதன் பிறகு கேரளா, காசி, ராமேஸ்வரத்திற்கு செல்கிறார்கள் படக்குழுவினர். படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், யுவுனும் சேர்ந்து இசையமைக்கிறார்கள் என்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது. . 
 
மேலும் மைனா, பைரவா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். 
 
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள செய்தி என்னவென்றால், இப்படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறாராம்.
 
தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் ஆட்டோ ஓட்டுனராக நடித்தால் அதுக்கு தனி வரவேற்பு உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆட்டோ ஓட்டுனராக நடித்த பாட்ஷா இன்று வரை பேசப்படுகிறது என்பது உலகம் அறிந்தவையே. 
 
ஆதலால் விஜய் சேதுபதியை ஆட்டோ ட்ரைவர் கெட்டப்பில் பார்க்க அவரின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். விரைவில்  இப்படத்தை பற்றிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments