மீண்டும் வில்லன் வேடம் தரிக்கும் விஜய் சேதுபதி ! ஹீரோ யார் தெரியுமா ?

Webdunia
வியாழன், 16 ஜனவரி 2020 (20:38 IST)
நடிகர் விஜய் சேதுபதி தனது வித்தியாசமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள நிலையில் இமேஜ் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும் கதாபாத்திரங்கள் பிடித்திருந்தால் வில்லனாக நடிக்கவும் தயங்குவதில்லை. ஏற்கனவே ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்திலும் விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது மீண்டும் ஒருமுறை வில்லன் வேடம் தரிக்க உள்ளார். ஆனால் இம்முறை தெலுங்கில். அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கும் புதிய படத்தில் அவர் வில்லனாக நடிக்க இருக்கிறார். சைரா படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் புகழ்பெற்றார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments