Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தர்பார் டிக்கெட்தான் ப்ளாக்கில் விற்கும்; துக்ளக் அல்ல! – ரஜினியை வாரிய சுப.வீ!

Advertiesment
தர்பார் டிக்கெட்தான் ப்ளாக்கில் விற்கும்; துக்ளக் அல்ல! – ரஜினியை வாரிய சுப.வீ!
, வியாழன், 16 ஜனவரி 2020 (17:00 IST)
துக்ளக் மட்டும் படிக்கும் அறிவாளிகளுக்கு வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என வெளிப்படையாக ரஜினியை விமர்சித்துள்ளார் சுப.வீரபாண்டியன்.

துக்ளக் பத்திரிக்கையின் 50 வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் “முரசொலி வைத்திருந்தால் அவரை திமுகக்காரன் என்பார்கள், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்” என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இதுகுறித்த மீம்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

மேலும் 1971ம் ஆண்டில் பெரியார் ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் எடுத்து சென்றதாகவும், அதை விமர்சித்து பேசிய ஒரே பத்திரிக்கை துக்ளக்தான் எனவும் ரஜினி பேசியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுப.வீரபாண்டியன் “கருத்து சொல்ல எல்லாருக்கும் உரிமை உண்டு. ஆனால் திரித்து பேசக்கூடாது. அன்று பாஜகவின் போராட்டத்திற்கு அனுமதி அளித்தது கலைஞர் கருணாநிதி அரசுதான்.

சேலத்தில் பெரியார் ஊர்வலத்தில் பாஜகவினர் அவர் மீது செருப்பை வீசினர். அது தவறி பின்னால் கொண்டு வரப்பட்ட ராமச்சந்திரரின் புகைப்படத்தில் விழுந்தது. இதுகுறித்து ரஜினி எதுவும் பேசவில்லை. ரஜினியை போலவே சோ சாரும் செய்தியை திரித்து அட்டையில் வெளியிட்டார். கலைஞரை விமர்சித்ததற்காகவே துக்ளக் தடை செய்யப்பட்டது. இது தெரியாமல் அந்த வீராதி வீரர் துக்ளக் அச்சிடப்பட்டு பிளாக்கில் விற்பனையானது என்கிறார். தர்பார் பட டிக்கெட்தான் ப்ளாக்கில் விற்கும், துக்ளக் பத்திரிக்கை அல்ல” என்று கூறியுள்ளார்.

விடுதலை, முரசொலி படிப்பவர்களுக்கு நாட்டு நடப்பு தெரியும். துக்ளக் மட்டும் படிக்கும் அறிவாளிகளுக்கு வரலாறு தெரிய வாய்ப்பில்லை’ என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”திருவள்ளுவர் நாளில் அந்த மகானை வணங்குகிறேன்”.. தமிழில் டிவிட் செய்த மோடி