Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் சினிமா கேரியரில் நான் மனதில் வைத்துக் கொள்ளும் ஒரு படமாக ‘மகாராஜா’ இருக்கும்… விஜய் சேதுபதி நம்பிக்கை!

vinoth
புதன், 5 ஜூன் 2024 (16:45 IST)
விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு மத்தியில் தொடங்கி இறுதியில் முடிவடைந்தது. இது விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. ஷூட்டிங் முடிந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக ரிலீஸ் ஆகாமல் இருந்த இந்த படம் இப்போது ஜூன் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள விஜய் சேதுபதி. “நமது பள்ளி வாழ்க்கை மிகவும் அழகானதாக இருந்திருக்கும். ஆனால் இப்போது ஒரு பத்து நினைவுகள்தான் நம் மனதில் முக்கியம் பெற்று ஞாபகத்தில் இருக்கும். அது போல என் வாழ்க்கையில் நான் ஞாபகம் வைத்திருக்கும் ஒரு படமாக மகாராஜா இருக்கும். இந்த படத்துக்காக வேலை பார்த்த நாட்கள், கதாபாத்திரத்துக்காக தயாரான நாட்கள் எல்லாம் என் மனதில் நினைவில் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்தரத்தில் பறக்கும் அஜித் கார்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட மாஸ் வீடியோ..!

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இன்னொரு திரைப்படம்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

ஸ்டன்னிங்கான லுக்கில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஆல்பம்!

கிளாமர் ட்ரஸ்ஸில் க்யூட்டான போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

சிவப்பு நிற காஸ்ட்யூமில் கண்கவர் போட்டோக்களை பகிர்ந்த பிரியா வாரியர்!

அடுத்த கட்டுரையில்
Show comments