Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலையாளத்தில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி!

மலையாளத்தில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி!
, வெள்ளி, 21 டிசம்பர் 2018 (12:39 IST)
இயக்குனர் சனில் கலாதில் இயக்கும் படத்தில் நடிகர் ஜெயராம் உடன் மக்கள் செல்வன்.


 
மக்களை மகிழ்விப்பதில் என்றும் குறை வைத்ததில்லை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. நடிகர் விஜய் சேதுபதியின் 25-வது படமான 'சீதக்காதி' வெளியாகி, ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இயக்குநர் பாலாஜி தரணிதரண் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் 75 வயது முதியவரான நாடகக் கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. 
 
அதுமட்டுமின்றி , நடிகர் ரஜினியுடன் இவர் நடித்திருக்கும் 'பேட்ட', பொங்கலுக்கு வெளியாகிறது. இதை தவிர, தியாகராஜா குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்', சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்ம ரெட்டி', 'மாமனிதன்', இயக்குநர் விஜய் சந்தர் படம் என இவரது கால்ஷீட் நிரம்பி வழிகிறது. 
 
நடிகர் சிரஞ்சீவியின் சயிர நரசிம்மரெட்டி என்ற தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் நிலையில், தற்போது மலையாள இண்டஸ்ட்ரியிலும் கால் பதித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஐபி 2ன்னு நெனச்சியா மாரி 2 டா: வேற லெவல்: கலக்கல் டிவிட்டர் விமர்சனம்