Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தொடங்கிய விஜய் சேதுபதி பொன்ராம் திரைப்பட படப்பிடிப்பு!

மீண்டும் தொடங்கிய விஜய் சேதுபதி பொன்ராம் திரைப்பட படப்பிடிப்பு!
, சனி, 8 ஜனவரி 2022 (10:00 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் பொன்ராம் இயக்கும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி வசம் தற்போது 20 படங்களுக்கு மேல் கைவசம் உள்ளது. அவற்றில் 10க்கும் மேற்பட்ட படங்கள் முடிந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளன. சில படங்கள் ஓடிடி ரிலீஸூக்கு முயற்சி செய்து வருகின்றன. அவர் கைவசம் உள்ள படங்களில் பொன்ராம் இயக்கும் பெயரிடாத படமும் ஒன்று. இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து முடிந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் விதிமுறைகளை மீறியதாக படக்குழுவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இந்த படத்தைக் கிடப்பில் போட்டார். இந்நிலையில் இப்போது பொள்ளாச்சியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி போலிஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுசி கணேசனின் புதிய படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா!