விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா நடிப்பில் எஸ் பி ஜனநாதன் இயக்கிய புறம்போக்கு என்கிற பொதுவுடைமை திரைப்படம் இன்னமும் எந்த தொலைக்காட்சிக்கும் விற்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.
விஜய் சேதுபதி, ஆர்யா மற்றும் ஷாம் நடிப்பில் எஸ் பி ஜனநாதன் இயக்கிய திரைப்படம் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை. இந்த படம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. ஆனால் ரிலீஸாகி நான்கு ஆண்டுகளாகியும் இந்த திரைப்படம் இன்னும் எந்தவொரு தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப படவில்லை. அதுபோல ஓடிடி தளங்களிலும் வெளியாகவில்லை.
இதுகுறித்து எஸ் பி ஜனநாதன் தன்னுடைய நேர்காணல் அந்த படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது இன்னும் அதிக ரசிகர்களை சென்று சேரும் எனக் கூறியுள்ளார்.