விஜய் சேதுபதி தற்போது தமிழ் மொழி தாண்டியும் இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழிலும் அவர் வில்லனாக பல படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் மட்டும் தோல்வி அடைந்து வருகின்றன.
இந்நிலையில் இப்போது அவர் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பில் உருவாகும் கோஸ்ட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.