மணிகண்டன் இயக்கும் வெப் சீரிஸில் விஜய் சேதுபதி… திண்டுக்கல்லில் பரபரப்பாக நடக்கும் ஷூட்டிங்!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (09:25 IST)
இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை ஆகிய படங்கள் மிகப்பெரிய அங்கிகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்தன. ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் கடைசி விவசாயி படத்தை இயக்கி இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்டார். அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக இருவரும் ஒரு படைப்புக்காக இணைந்துள்ளனர்.  ஆனால் இந்த முறை ஒரு படத்துக்காக அல்ல, வெப் சீரிஸ்க்காக. தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் வெப் தொடராக உருவாகி வருகிறது. இந்த தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்போது திண்டுக்கல்லில் இந்த வெப் சீரிஸின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி கலந்துகொள்ள முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் மணிகண்டன். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘டாக்ஸிக்’ படக்குழு!

எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது… ஜாய் கிரிசில்டா அறிவிப்பு!

கதாநாயகியாக அறிமுகமாகும் குஷ்புவின் மகள் அவந்திகா!

இயக்குனர் +நடிகராகக் களமிறங்கிய இளன்… ஹீரோயின் இவர்தான்!

அட்டகாசம் ரி ரிலீஸ் சொதப்பல்… அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments