Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது வாரத்திலும் கலக்கும் மகாராஜா… விஜய் சேதுபதியின் முதல் 100 கோடி ரூபாய் வசூல் படமாக சாதனை படைக்குமா?

vinoth
வெள்ளி, 21 ஜூன் 2024 (11:02 IST)
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா கடந்த வாரம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது மகாராஜா. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், அதிலும் குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் அந்த கிளைமேக்ஸ் காட்சிக்காக அதீத டிராமவை கொண்டு செயற்கை தன்மை கொண்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போது வரை இந்த படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இரண்டாவது வாரத்தில் வேலை நாட்களில் கூட இந்த படத்துக்கு கூட்டம் வருகிறது. அதனால் இந்த வார இறுதிக்குள் 75 கோடி ரூபாய் வசூலை எட்டும் எனவும் கல்கி படம் ரிலீஸான பின்னரும் படம் நன்றாக ஓடினால் விஜய் சேதுபதியின் முதல் 100 கோடி ரூபாய் வசூல் படமாக அமையும் எனவும் திரை வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காயடு லோஹர் வெளியே.. மமிதா பாஜூ உள்ளே.. தனுஷின் அடுத்த பட நாயகி அப்டேட்..!

டிமாண்டி காலனி 3.. சம்பளத்தை குறைத்து கொண்டார்களா அருள்நிதி, அஜய்ஞானமுத்து?

அஜித் அடுத்த படம் குறித்து வதந்தி பரப்பும் வேலையற்றவர்கள்.. தயாரிப்பு தரப்பு கொடுத்த பதிலடி..!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments