Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கும் 7 ஜி ரெயின்போ காலணி 2 ஷூட்டிங்!

vinoth
வெள்ளி, 21 ஜூன் 2024 (10:57 IST)
2004 ஆம் 7ஜி ரெயின்போ காலணி தமிழ் சினிமா கண்ட மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. அந்த படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் சோனியா அகர்வால். இந்த படம் செல்வராகவனின் சினிமா கேரியரில் ஒரு மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. யுவன் இசையில் நா முத்துக்குமாரின் பாடல்கள் எவர்கீர்ன் சார்ட்பஸ்டர் ஹிட்ஸ்களாக அமைந்தன.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இரண்டாம் பாகத்தையும் செல்வராகவனே இயக்க, ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் தொடங்கியுள்ளது. அங்குள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் செல்வராகவன் ரவிகிருஷ்ணா நடிக்கும் சில காட்சிகளைப் படமாக்கியுள்ளார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் வரும் 24 ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இதில் ரவிகிருஷ்ணா மற்றும் அனஸ்ரா ஆகியோர் நடிக்கும் காட்சிகளை படமாக்கவுள்ளாராம் செல்வராகவன். இந்த காட்சிகளில் நடிப்பதற்காக ரவி கிருஷ்ணா உடல் எடையைக் குறைத்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜீ.வி. பிரகாஷ் குமார் ஹாரர் திரைப்படமான 'பார்க்' தி படத்தின் பர்ஸ்ட் லுக்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

அடுத்த கட்டுரையில்
Show comments