Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்துக்காக உடல் எடையைக் குறைக்கும் விஜய் சேதுபதி!

vinoth
புதன், 12 மார்ச் 2025 (09:31 IST)
ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட்டாக கொடுத்த இயக்குனர் அட்லி, அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

இதற்கிடையில் அவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ‘ ஏ ஃபார் ஆப்பிள்’ நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து படங்களைத் தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்துக்காக முதல்முறையாக விஜய் சேதுபதி தன்னுடைய உடல் எடையைக் குறைத்து வருகிறாராம். மேலும் சிலம்பப் பயிற்சியும் பெற்று வருகிறாராம். விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி கூட்டணியில் உருவான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதகாதி’ ஆகிய படங்களுக்குப் பிறகு மூன்றாவது படமாக இந்த படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?

வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பதே சுதந்திரம்… மற்றவர்களின் கருத்துக்கு எதற்குக் கவலை? –சமந்தா ஓபன் டாக்!

நா முத்துக்குமார் நினைவு இசை நிகழ்ச்சியில் கமல் முதல் தனுஷ்வரை… திரைத்துறையினரின் பட்டியல் வெளியீடு!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் கதாநாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த்!

புதிய வடிவத்தில் மீண்டும் ரிலீஸாகும் ‘அஞ்சான்’… இயக்குனர் லிங்குசாமியின் நம்பிக்கை வெற்றி பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments