Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’.. இன்னொரு 100 கோடி ரூபாய் வசூலா?

Mahendran
வெள்ளி, 15 நவம்பர் 2024 (10:08 IST)
சீனாவில் தமிழ் படங்கள் மிக குறைவாகவே வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் திரைப்படம் சீனாவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.  

விஜய் சேதுபதி நடிப்பில், நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான ‘மகாராஜா’ திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 110 கோடி ரூபாய் வரை வசூல் செய்து, வணிக ரீதியிலும் வெற்றியை அடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஓடிடி ப்ளாட்ஃபார்மிலும் பாராட்டுகளை பெற்ற நிலையில், அடுத்த கட்டமாக சீனாவில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மகாராஜா’ திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி சீன திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ போஸ்டரும் வெளியாகி வைரலாகி வருகின்றது. சீனாவிலும் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் பெற்றதாகவும், அவர் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பில்டப் மட்டும்தான்.. உள்ள ஒன்னும் இல்ல- ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் எம்புரான்..!

சாதரண கடைக்காரன்தான்.. ஆனா குடும்பம்னு வந்துட்டா..! - வீர தீர சூரன் திரைவிமர்சனம்!

பல தடங்கல்களுக்குப் பிறகு ரிலீஸான ‘வீர தீர சூரன்’… ரசிகர்கள் மத்தியில் குவியும் பாராட்டுகள்!

அன்னை இல்லம் எனக்கு சொந்தமான வீடு – ஜப்திக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பிரபு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments