ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva
புதன், 3 ஜூலை 2024 (18:37 IST)
நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்ற நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு நூறு கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை பெற்றுள்ள நிலையில் விஜய் சேதுபதி தரப்பு மகிழ்ச்சியாக உள்ளனர். 
 
மேலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்வது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் இந்த படம் 3 வாரங்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேஷன் ஸ்டுடியோ தனது சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளதை அடுத்து பட குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
இதனை அடுத்து விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments