120 ரூபாயுடன் வெளியாகியுள்ள ’லாபம்’ பட போஸ்டர்: ஓடிடியா? திரையரங்கிலா?

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2021 (10:45 IST)
120 ரூபாயுடன் வெளியாகியுள்ள ’லாபம்’ பட போஸ்டர்:
நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’லாபம்’, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் திரையரங்குகளில் தான் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் இன்று புத்தாண்டு வாழ்த்து கூறி ஓடிடியில் பட போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் ஒரு நூறு ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 120 ரூபாய் கொடுத்து திரை அரங்குகளில் இந்த படத்தை பார்க்கலாம் என்று மறைமுகமாக இந்த போஸ்டர் சொல்கிறதா? அல்லது க/பெ ரணசிங்கம் போல் 120 ரூபாய் ஓடிடியில் கொடுத்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறதா? என்று புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்
 
முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இந்த படத்தில் ஜெகபதிபாபு, சாய்தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி இமான் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments