Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கின்றாரா மாளவிகா மோகனன்? பரபரப்பு தகவல்!

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கின்றாரா மாளவிகா மோகனன்? பரபரப்பு தகவல்!
, ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (08:35 IST)
விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கின்றாரா மாளவிகா மோகனன்?
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் மாஸ்டர் உட்பட நான்கு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி ஒரு வெப்சீரீஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த வெப்சீரீஸ்ஸில் மாஸ்டர் படத்தின் நாயகி மாளவிகா மோகனன் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் ஒரே வெப்சீரீஸில் இணைந்து நடித்தாலும் மாளவிகா மோகனனனுக்கு ஜோடியாக விஜய்சேதுபதி நடிக்கவில்லை என்பதும், மாளவிகாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெப்சீரிஸ் ஹிந்தியில் மட்டுமே தற்போதைக்கு தயாராக உள்ளது என்றாலும் இந்த தொடர் தமிழிலும் டப்பிங் செய்யப்படும் என குறிப்பிடத்தக்கது 
 
அடுத்த ஆண்டு அமேசான் பிரைமில் ஒளிபரப்பாக இருக்கும் இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகிய இருவரும் ஒரு வெப்சீரீஸில் நடிக்கவுள்ள செய்தி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜாவின் பாடல்50 மில்லியன் வியூஸ்….ரசிகர்கள் கொண்டாட்டம் !