Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

அதை ஏன் எங்கிட்ட கேக்குறீங்க..? வில்லங்க கேள்வியால் கடுப்பான விஜய் சேதுபதி!

Advertiesment
Vijay Sethupathi
, சனி, 16 நவம்பர் 2019 (16:13 IST)
விஜய் சேதுபதி நடிப்பில், விஜய்சந்தர் இயக்கத்தில், விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த ‘சங்கத்தமிழன்’ படம் விஷாலின் "ஆக்ஷன்" படத்திற்கு போட்டியாக வெளிவரவிருந்தது. ஆனால்,  கடைசி நேரத்தில் அஜித் நடித்த வீரம் படத்தினால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விநியோகஸ்தர்கள் படத்தை வெளியிட முன்வரவில்லை. இதனால் படத்தின் ரிலீஸ் நேரம் தாமதமாகி நள்ளிரவில் வெளியானது. 
இதனால் கொஞ்சம் மனம் வருத்தத்தில் இருந்த விஜய்சேதுபதிக்கு அன்றைய தினத்திலே கலைமாமணி விருது வழங்கப்பட்டது.அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஜய்சேதுபதியிடம்பத்திரிக்கையாளர்கள், எடக்குமடக்காக சில கேள்விகளை கேட்டு அவரை கடுப்பேற்றி விட்டனர். 
 
சங்கத்தமிழன் ஏன் குறித்த தேதியில் ரிலீசாகவில்லை? என கேட்டதற்கு... அதைப்பற்றியெல்லாம் உங்களிடம் சொல்லி ஒன்னும் ஆகப்போறதில்லை என காட்டமாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல முயற்சித்த போது மீண்டும் அவரை மடக்கி பிடித்து,  ஐஐடி மாணவி பாத்திமா இறந்ததை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டனர்.. உடனே,  அதை ஏன் என்கிட்ட கேக்குறீங்க? என வெறுப்புடன் பதில் அளித்தார். அவர் இப்படி பேசியதை கேட்ட அங்கிருந்தவர்கள் விஜய் சேதுபதியே இப்படி...? என ஷாக்காகி விட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதித்ய வர்மா படத்தின் ரொமான்டிக் ப்ரோமோ வீடியோ!