ரி ரிலீஸ் ரேஸில் இணையும் விஜய் சேதுபதியின் தர்மதுரை… இயக்குனர் சீனுராமசாமி அறிவிப்பு!

vinoth
வியாழன், 7 மார்ச் 2024 (09:39 IST)
விஜய் சேதுபதி, தமன்னா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ரிலீஸான திரைப்படம் தர்மதுரை. இந்த படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்க ஆர் கே சுரேஷ் தயாரித்திருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

யுவன் இசையில் இந்த படத்துக்காக பாடல் எழுதிய வைரமுத்துவுக்கு “எந்தன் பக்கம் பார்த்தாலும் வானம் ஒன்று” என்ற பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படம் திரையரங்க வெளியீட்டின் போது நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து இப்போது இந்த படத்தை ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி அறிவித்துள்ளார்.

இது சம்மந்தமான அவரது முகநூல் பதிவில் “மீண்டும் திரையரங்கம் வருகிறான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் தர்மதுரை. நன்றி நடிகர் & தயாரிப்பாளர் R. K. சுரேஷ்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டார்க் காமெடி திரைப்படமான ரிவால்வர் ரீட்டா' தேறியதா? கீர்த்தி சுரேஷ் நடிப்பு எப்படி?

ஆர்பி சௌத்ரிக்கே தண்ணி காட்டியவர் ராஜகுமாரன்.. இப்படிலாம் நடந்துருக்கா?

காதலுக்காக ஒரு மனிதன் எவ்வளவு தூரம் செல்வான்?... தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ எப்படி?- ரசிகர்கள் விமர்சனம்!

கைவிடப்பட்டதா ஜூனியர் NTR-ன் தேவரா 2… அடுத்த கதைக்கு நகர்ந்த இயக்குனர்!

Stranger things வெளியானதும் முடங்கிய நெட்பிளிக்ஸ் தளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments