Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குளிக்கிறதை காட்டுறீங்க... துணி மாத்துறத காட்ட மாட்டறீங்க..? விஜய் சேதுபதியின் தெனாவட்டு பேச்சுக்கு கண்டனம்!

Advertiesment
குளிக்கிறதை காட்டுறீங்க... துணி மாத்துறத காட்ட மாட்டறீங்க..? விஜய் சேதுபதியின் தெனாவட்டு பேச்சுக்கு கண்டனம்!
, வெள்ளி, 8 மே 2020 (12:37 IST)

தமிழ் சினிமாவில் கொஞ்சம் பெரிய நடிகர்கள் அந்தஸ்திற்கு உயர்ந்துவிட்டால் அறிவுரை கூறுகிறேன், தத்துவம் பேசுகிறேன் என பல மேடையில் மதம் சார்ந்த பிரச்னைகளில் மூக்கை நுழைத்து சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கின்றனர். சமீபத்தில் தான் நடிகை ஜோதிகாவின் தஞ்சை பெரிய கோவில் விவகாரம் ஆய்ந்து ஓய்ந்தது.

இந்நிலையில் தற்போது  அதே ஸ்டைலில் நடிகர் விஜய் சேதுபதி சிக்கியுளளார். அதவது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்ற விஜய் சேதுபத்தி அந்த மேடையில் நடந்த சம்பவம் ஒன்றை குட்டி கதையாக கூறினார். அவர் பேசியதாவது, "இந்து கடவுள் குளிக்கும்போது காட்டுவதை போல உடை மாற்றுவதையும் காட்டலாமே’’ என கிண்டலடிக்கும் விதத்தில் பேசியுள்ளார்.  இந்துக்கள் வழிபடும் கோவில் அபிஷேகம் செய்துகொண்டிருந்தபோது சிறுமி ஒருவரை அவரது தாத்தாவிடம்,  " "எதற்காக சாமிகளை குளிக்கும்போது காட்டுகிறார்கள். துணி மாற்றும்போது காட்ட மாட்டேன் என்கிறார்கள்?’’ என்று சந்தேக கேள்வி கேட்டார், அதற்கு தாத்தா மழுப்பலான பதிலை கூறி குழந்தையை சமாளித்தார் என கூறி  ‘’இந்து கடவுள் குளிக்கும்போது காட்டுவதை போல உடை மாற்றுவதையும் காட்டலாமே’’ என தன்னுடைய கருத்தினை  சிறுமி கூறியது போல விஜய் சேதுபதி பேச அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

அவர் பேசிய அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கண்டனங்கள் எழுந்து வ்ருகிறது.   அபிஷேகம் செய்யும் ஆடையுடன் தான் கடவுள் விக்ரகங்கள் இருக்கும். ஆனால், அபிஷேகம் முடிந்த பிறகு திரையை மூடி விட்டு தான் புத்தாடை உடுத்தி அலங்காரம் செய்வார்கள். இந்து கடவுளின் கலாச்சாரம் என்னவென்று கூட தெரியாமல் வாய்க்கு வந்தபடி இழிவாக பேசியுள்ள விஜய் சேதுபதிக்கு ஒட்டுமொத்த இந்து சமூகத்தினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இது எங்க போய் முடியப்போகுதோ...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த கேரக்டர் தளபதி விஜய்தான் பண்னனும்! – சொன்னது ஹாலிவுட் டைரக்டர்!