Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முருக பக்தராக நடிக்கும் விஜய் சேதுபதி… வாயைத் திறந்தாலே தத்துவம்தானாம்!

முருக பக்தராக நடிக்கும் விஜய் சேதுபதி… வாயைத் திறந்தாலே தத்துவம்தானாம்!
, வியாழன், 3 ஜூன் 2021 (17:11 IST)
நடிகர் விஜய் சேதுபதி கடைசி விவசாயி படத்தில் முருக பக்தராக நடித்துள்ளாராம்.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் தனது நான்காவதாகப் படமாகக் கடைசி விவசாயி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் முழுவதுமாக தயாராகி விட்டாலும் சில ஆண்டுகளாக ரிலீஸாகாமல் கிடப்பில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா லாக்டவுனும் சேர்ந்துகொண்டதால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிகண்டன் முடிவு செய்துள்ளாராம். அதற்கான பேச்சுவார்த்தைகள் இப்போது நடந்து வருகின்றன.

இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் விஜய் சேதுபதி முருக பக்தராக நடித்துள்ளாராம். அவர் பேசும் வசனங்கள் எல்லாமே அறிவுரையாகவும், தத்துவமாகவும் இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தமிழுக்கு வரும் பூ பார்வதி… எதிர்ப்பு உருவாகுமா?