Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் கமல்ஹாசனுக்கு வில்லனாக விஜய்சேதுபதி !

நடிகர் கமல்ஹாசனுக்கு வில்லனாக விஜய்சேதுபதி !
, திங்கள், 17 மே 2021 (18:12 IST)
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளாதாகத் தகவல் வெளியாகிறது.

தேர்தலுக்கு முன்னமே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனற ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசன் கோவையில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடுவதால் பிஸியாக இருந்தார். தற்போது தேர்தல் வேலைகள் முடிந்துவிட்டதால் அடுத்து விக்ரம் என்ற படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இப்படத்தில் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்திருந்த மலையாள நடிகர் ஃப்கத்பாசில் கமலுக்கு வில்லனாக  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால செய்திகள் வெளியானது.

இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக அனைவரிடமும் பாராட்டுகள் பெற்ற நிலையில் இப்படத்தில் மிகச்சிறந்த கமலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
 
webdunia

நீண்டகாலம் கழித்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள இப்பபடத்தை ஹிட் ஆக வேண்டுமென லோகேஷ் படக்குழுவினர் தீர்மானித்துள்ளதால் படம் பிரமாண்டமாக உருவாகும் எனத் தெரிகிறது. மேலும், விஜய் சேதுபதி ரசிகர்கள் இந்தச் செய்தியை வைரலாக்கி வருகின்றனர்.

விஜய்சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள லாபம் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக அரசின் செயலைப் பாராட்டிய…பிரபல இயக்குநர்