Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கார்த்திக் சுப்பராஜோடு இணையும் விஜய் சேதுபதி!

Webdunia
ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (11:25 IST)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை முதல் காப்பி அடிப்படையில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பதாக இருந்த நிலையில் அதில் இருந்து வெளியேறினார்.

கார்த்திக் சுப்பராஜும் விஜய் சேதுபதியும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு குறும்பட காலத்தில் இருந்தே நண்பர்கள். அதனால் அவரின் எல்லா படத்திலும் ஏதாவது ஒரு வகையில் விஜய் சேதுபதி இருக்கும்படி பார்த்துக் கொள்வார். இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு படத்தை நடித்துக் கொடுக்க சம்மதித்தார் விஜய் சேதுபதி. அந்த படத்தை இயக்க பொன்ராம் ஒப்பந்தமானார். இந்த படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் பைனான்ஸ் செய்வதாக இருந்தது.

ஆனால் இப்போது  அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே நேரடியாக தயாரிக்க உள்ளதாகவும், கார்த்திக் சுப்பராஜ் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் வெளியாகவில்லை. இதனால் இப்போது விஜய் சேதுபதி தனது நண்பர் கார்த்திக் சுப்பராஜுக்காக மீண்டும் ஒரு படத்தை நடித்துக் கொடுக்க உள்ளாராம் . அனேகமாக இந்த படத்தைக் கார்த்திக் சுப்பராஜே இயக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இருவரும் தாங்கள் ஓப்புக்கொண்டுள்ள படத்தை முடித்துவிட்டு இந்த படத்தில் இணைவார்கள் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியடித்துக் கொள்ளுங்கள்.. ஆளுநர் நிகழ்ச்சியைக் கண்டித்த வைரமுத்து!

ஆன்லைன் மோசடி…தயாரிப்பாளர் ரவீந்தரனுக்கு மும்பை போலீஸ் சம்மன்!

நயன்தாராவிடம் மட்டும் ஸ்ட்ரிக்… வி ஜே சித்துவுக்கு இலவசமாகப் பாடலை கொடுத்த தனுஷ்!

லோகேஷ் தயாரிப்பில் யுடியூபர் பாரத் கதாநாயகனாக நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’… ஷூட்டிங் நிறைவு!

தேசிய விருது வாங்கும்போது என் நகங்களில் மாட்டு சாணம் ஒட்டியிருந்தது- நித்யா மேனன் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments