Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் படத்தில் நானும் இருக்கிறேன்…. விஜய் சேதுபதி பதில்!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (12:51 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகர். அவரின் கைதி படத்தை விருமாண்டியின் தொடர்ச்சி என்றும் மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.  இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இந்நிலையில் இப்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் கமல்ஹாசனை அவரது ஹெலிகாப்டரில் சந்தித்த லோகேஷ் கனகராஜ் ‘ஆரம்பிக்கலாங்களா #விக்ரம்’ என குறிப்பிட்டுள்ளார். இதனால் விரைவில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக ஏற்கனவே பஹத் பாசில் அறிவித்துள்ளார். இந்நிலையில் மற்றொரு கதாபாத்திரத்தில் தானும் நடிப்பதாக இப்போது விஜய் சேதுபதி கூறியுள்ளார். ஆனால் இன்னும் தேதிகள் ஒதுக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விவாகரத்தின் போது மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தேன் – அமீர்கான் ஓபன் டாக்!

எனக்குள் இருந்த நக்கல் வில்லனை முருகதாஸ் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் – சத்யராஜ் மகிழ்ச்சி!

துபாயை அடுத்து இத்தாலியிலும் 3வது இடம்.. அஜித்தின் கார் ரேஸ் அணி சாதனை..!

ஒரு வருடம் தள்ளிவைக்கப்பட்ட யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்பட ரிலீஸ்!

இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது ஏன்?.. தயாரிப்பாளர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments