இலங்கை தமிழராக நடிக்கும் விஜய் சேதுபதி – வெளியான தகவல்!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (10:58 IST)
விஜய் சேதுபதி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தில் இலங்கை தமிழராக நடித்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் உள்பட 6 திரைப்படங்கள் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் திரையரங்குகள் திறந்து விட்டதால் அடுத்தடுத்து அவருடைய படங்கள் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது . இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது.

இதனை அடுத்து விஜய் சேதுபதி உள்பட படக்குழுவினர் அனைவரும் கேக் வேட்டி படப்பிடிப்பு முடிவடைந்ததை கொண்டாடினார். இன்னும் ஒரு சில மாதங்களில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளை முடித்து வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்த படத்தை திரையிட முடிவு செய்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி இலங்கை தமிழராக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து வெளிநாட்டுக்கு செல்லும் அவர் இசையமைப்பாளராக எப்படி மாறுகிறார் என்பதே கதையாம். விஜய் சேதுபதி ஜோடியாக மேகாஆகாஷ் நடிக்கும் இந்த படத்தில் இயக்குனர்கள் மோகன் ராஜா மற்றும் மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments