இறுதிகட்டத்தை நெருங்கிய விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’… படக்குழுவினர் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (07:38 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் இயக்கும் மகாராஜா ஷூட்டிங் கடந்த மே மாதம் தொடங்கியது. விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா இயக்கி வருகிறார். இது விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகி வருகிறது.

தொடர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் எடுத்த வரையிலான காட்சிகளைப் பார்த்துள்ள படக்குழுவினர், படம் சிறப்பாக வந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் விஜய் சேதுபதியின் தோல்வி பட வரிசைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் நம்பிக்கையோடு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாராட்டுகளைக் குவிக்கும் ‘பைசன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!

எழுச்சி அடைந்த எதிர்நீச்சல்.. சிங்கப்பெண்ணுக்கு சறுக்கல்.. சிறகடிக்க ஆசைக்கு என்ன ஆச்சு.. டிஆர்பி தகவல்..!

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

அடுத்த கட்டுரையில்
Show comments