Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யின் ''வாரிசு'' பட குத்துப் பாடல் லீக்! வைரலாகும் வீடியோ...படக்குழு அதிர்ச்சி

Advertiesment
Varisu
, திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (13:47 IST)
தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து  'ஒரு குத்துப் பாடல்' ஒன்று லீக் ஆகி வைரலாகி வருகிறது.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில், விஜய் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி படம் வாரிசு. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இதையடுத்து, இப்படத்தின் ஹூட்டிங் சமீபத்தில் விசாகபட்டிணத்தில் நடந்தது. இதில், விஜய்யின் ஆக்சன் காட்சிகள் வைரலானது.

இதையடுத்து, ராஷ்மிகா- விஜய் சம்பந்தப்பட்ட புகைப்படம் வைரலானது. இதனை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என சமீபத்தில் இயக்குனர் வம்சி உத்தரவிட்டிருந்தார்

இந்த உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென தற்போது விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையதளத்தில் லீக் ஆகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் குறிப்பாக இயக்குனர் வம்சி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்

தமன் இசையமைத்துள்ள இப்பாடல், ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இப்பாடலில் விஜயின் நடனம் ரசிகர்ககளின் பாராட்டை பெற்று வருகிறது. இப்பாடலும் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் தோல்வி எதிரொலி: ரூ.80 கோடி சம்பளத்தை குறைத்த நடிகர்