Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

25 நாட்களின் ரூ.250 கோடி வசூல் செய்த விஜய்யின் ''மாஸ்டர்''

Advertiesment
25 நாட்களின் ரூ.250 கோடி வசூல் செய்த விஜய்யின்  ''மாஸ்டர்''
, வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (21:01 IST)
சமீபத்தில் பொங்கலுக்கு வெளியாகி திரையரங்கிற்கு புத்துயிரூட்டியது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.
 

இப்படம் கடந்த ஆண்டு ரிலீஸாகியிருக்க வேண்டியது என்றாலும் கொரோனா தொற்று எனப்படுவதாலும், இன்னும் இதன் தீவிரத்தன்மை குறையவில்லை என்பதாலும் அரசு 50% இருக்கைகளுக்கு மட்டுமே அப்போது அனுமதி அளித்தது. ஆனாலும் படம் வசூலில் சாதனை நிகழ்த்தியது.

 உலகளவில் ரூ.200 கோடி வசூல் வாரிக்குவித்துள்ளதாக தகவல் வெளியானது. கடந்த ஜனவரி 29 ஆம் தேதி அமெசான் பிரைமில் இப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் , மாஸ்டர் திரையில் வெளியாகிய 25 நாட்களில் சுமார் ரூ.250 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக விஜய் ரசிகர்கள் தகவல் பரப்பி வருகின்றனர்.

மாஸ் படங்களின் ஃபார்முலாவை மாற்றியுள்ளது நடிகர் விஜய்யின் மாஸ்டர் எனப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், சூர்யாவின் சூரரைப் போற்றுப் படம் அமேசானில் நிகழ்த்திய  வசூல் சாதனையை இப்படம் முறியடித்திடும் எனவும் நெட்டிசன் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடம் வெளியான 6 நாட்களில் சுமார் 2 கோடிப் பார்வையாளர்களை கடந்து சாதனைப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதியின் ''குட்டி ஸ்டோரி'' டிரைலர் ரிலீஸ்