Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யின் மாஸ்டர் பட ''வாத்தி கபடி'' பாடல் இன்று மாலை ரிலீஸ்

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (16:49 IST)
விஜய்யின் மாஸ்டர் படம் இந்த ஆண்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி நிலையில் இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக ரிலீஸாகி ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் நூறு நாட்கள் தாண்டி ஓடி பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் எனக் கூறி வருகின்றனர். இந்நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கபடி பாடல் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

விஜய் ,விஜய் சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.  

இன்று வெளியாகி கோலிவுட், டோலிவிட், சாண்டல்வுட், பாலிவுட் என அத்தனை திரைத்துறையினரின் ஆதரவைப் பெற்று பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வத்தி கபடிபாடல் வெளியாகவுள்ளது எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

அர்ஜூன் தாஸ் விஜய்யிடம் வம்பு செய்வதுபோலவும், அப்போது கபடி விளையாட்டில் பத்ரி என்ற அர்ஜூன் தாஸ்  மடீமை விஜய் பந்தாடுவதுதான் நேற்றைய 5 வது வீடியோ புரொமோ  காட்சி இருந்தது.

அநேகமாக கில்லி படம் 2 என்று சொல்லத்தக்க அளவில் இது விறுவிறுப்பாக உள்ளது. ஏற்கனவே

கில்லி படத்தில் வித்யாசாகர் இசையமைத்திருந்த நிலையில் இப்படத்திற்கு அனிருத் தனது பாணியில் அசத்தலாக இசையமைத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் தற்போது கில்லி என்று விஜய் ரசிகர்கள் ஹெஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments