Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முறுக்கு மீசையை மழித்த விஜய்

முறுக்கு மீசையை மழித்த விஜய்
, திங்கள், 17 ஏப்ரல் 2017 (15:38 IST)
அட்லீ இயக்கத்தில் நடித்துவரும் படத்துக்காக முறுக்கு மீசை வைத்திருந்த விஜய், அதை இப்போது எடுத்துவிட்டாராம்.
 

 

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிப்பில் பெயரிடப்படாத படத்தை இயக்கிவருகிறார் அட்லீ. அப்பா – இரண்டு மகன்கள் என விஜய் மூன்று கேரக்டர்களில் நடிக்கிறார் விஜய். மூன்று ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அப்பா கேரக்டருக்கான காட்சிகள் அனைத்தையும் படமாக்கி விட்டார்களாம். எனவே, அப்பா கேரக்டருக்காக வளர்த்த முறுக்கு மீசையை எடுத்துவிட்டு, இளமை தோற்றத்திற்கு மாறிவிட்டாராம் விஜய். விரைவில், மகன்கள் சம்பந்தப்பட்டக் காட்சிகளை எடுக்கப் போகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனனும், மகன்களுக்கு ஜோடியாக காஜல் மற்றும் சமந்தாவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய், சூர்யாவை அலறவிடும் நடிகை