Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகர் வரைந்த படத்தை டிபியாக வைத்த விஜய் ! ரசிகர்கள் கொண்டாட்டம்

Advertiesment
ரசிகர் வரைந்த  படத்தை டிபியாக வைத்த விஜய் ! ரசிகர்கள் கொண்டாட்டம்
, வெள்ளி, 28 அக்டோபர் 2022 (19:05 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தன் டுவிட்டரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் டிபியாக , இலங்கையைச் சேர்ந்த தன் ரசிகர் கஜேந்திரன் வரைந்த படத்தை வைத்துள்ளார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவருக்கு தமிழகம், கேரளா, ஆந்திராவை தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

இவரது ஒவ்வொரு படமும் மிகப்பெரிய வரவேற்பை பெரும்  நிலையில், சமீபத்தில் பீஸ்ட் படம் கலவையான விமர்சனம் பெற்றாலு வசூல் குவித்தது.

இதையடுத்து வம்சி இயகக்த்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார், இதன் போஸ்டர் புரடக்சன் பணிகள் நடந்து வரும் நிலையில், வரும் பொங்கலுக்கு அஜித்தின் ‘துணிவு’டன் மோதவுள்ளது ‘வாரிசு.’

இந்த நிலையில், இன்று  நடிகர் விஜய்யின் டுவிட்டர் பக்கத்தின் டிபியில்  அவரது ரசிகர்கள் கஜேந்திரா என்பவர் வரைந்து ஓவியம் வைக்கப்பட்டுள்ளது. இந்த டிவிட்டர் பக்கத்தில் விஜய்யின் அலுவலகத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.

ரசிகர்களின் விருப்பத்திற்கு விஜய் செவிசாய்க்கவும் கவனிக்கும் செய்கிறார் என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இதுகுறித்த ஹேஸ்டேக் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த  நாளை மறக்க முடியாது என விஜய் ரசிகர் கஜேந்திரா தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!