Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட் பட பணிகளை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்த விஜய்… என்ன காரணம்?

vinoth
வியாழன், 23 மே 2024 (11:19 IST)
விஜய் அரசியலில் இறங்கப் போவதால் தற்போது நடித்து வரும் கோட் படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என அறிவித்துள்ளார். இதனால் தற்போது அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில்  செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் விஎஃப்எக்ஸ் மற்றும் டி ஏஜிங் பணிகளுக்காக வெங்கட்பிரபு மற்றும் விஜய் ஆகியோர் அமெரிக்கா சென்று திரும்பினர். இந்தவாரத்தில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் ஷூட்டிங் நடந்தால் மொத்த படமும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்துக்கான டப்பிங் பணிகளை விஜய் ஜூலை மாதத்தில்தான் பேச உள்ளாராம். ஜூன் மாதம் முழுவதும் அவர் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஜூன் மாதத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்க உள்ளதால் மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை அவரின் கட்சி செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கோட்’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்.. வெங்கட் பிரபுவின் சூப்பர் அறிவிப்பு..!

ஹரிஷ் கல்யாணின் மார்க்கெட்டை விட அதிக பட்ஜெட்டில் உருவாகும் ‘டீசல்’… இத்தனை கோடியா?

நித்திலனின் அடுத்த படத்தில் இருந்து வெளியேறுகிறாரா நயன்தாரா?

பெண் ரசிகைகளை அதிகம் கவரப்போகும் ‘மிஸ் யூ’ நாயகி

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கிறாரா சீமான்?... ஓ அதுக்குதான் இந்த சந்திப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments