Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் அடுத்த பட இயக்குனர் அட்லி இல்லையா? லேட்டஸ்ட் தகவல்!

விஜய்யின் அடுத்த பட இயக்குனர் அட்லி இல்லையா? லேட்டஸ்ட் தகவல்!
, செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (12:54 IST)
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அட்லி, அடுத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக ஆனார். அதையடுத்து இப்போது பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை முடித்ததும் அவர் மீண்டும் விஜய்யை இயக்க உள்ளாராம். இந்நிலையில் இந்த படத்தை மிக அதிக பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை சில நாட்களுக்கு முன்னர் நடந்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக உருவாக்க விரும்பும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், அதற்காக ஷாருக் கானை இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க அட்லியிடம் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்காக அட்லிக்கு சம்பளமாக 50 கோடி ரூபாய் வரை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஷாருக் படத்துக்காக 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அட்லி, விஜய் படத்துக்கு அதைவிட அதிகமாக சம்பளம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு முன்பாகவே விஜய், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் ஒருவரை வைத்து குறுகிய காலத்தில் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இணையத்தில் கலக்கும் பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் க்யூட் கிளிக்ஸ்!