Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லி அலுவலகத்திற்கு விஜய் சென்றது ஏன்? மீண்டும் இணைகிறார்களா?

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (16:58 IST)
தளபதி விஜய் நடித்த பிகில் படத்தை அடுத்து அட்லியின் அடுத்த படம் என்ன என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஷாருக்கான் படத்தை இயக்குவதாக கூறப்பட்டாலும் அந்த படம் குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் எதுவும் இல்லை 
 
இந்த நிலையில் திடீரென அட்லியின் அலுவலகத்திற்கு விஜய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்த வீடியோ ஒன்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது 
 
இதனை அடுத்து  விஜய்யின் அடுத்த படத்தை அட்லி தான் இயக்கப் போவதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. ஏற்கனவே விஜய்யின் அடுத்த படத்தை நெல்சன் அல்லது எஸ்ஜே சூர்யா இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அட்லியின் பெயரும் அந்த பட்டியலில் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தை அட்லி ஒரு வேளை இயக்குவதாக இருந்தாலும் 2022ஆம் ஆண்டு தான் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்பதால் அதற்கு முன் விஜய்யின் படத்தை அட்லி இயக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments