Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிவிட்டர் ரீடுவீட்: புதிய சாதனை படைத்த விஜய் செல்ஃபி!

டிவிட்டர் ரீடுவீட்: புதிய சாதனை படைத்த விஜய் செல்ஃபி!
, செவ்வாய், 8 டிசம்பர் 2020 (11:18 IST)
டிவிட்டரில் அதிகம் ரீடுவீட் ஆன பதிவுகளில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்பி முதலிடம் பிடித்துள்ளது. 
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் ஷூட்டிங் இந்தியாவின் தமிழகத்தில் சென்னை, நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
 
நெய்வேலி படப்பிடிப்பின் போது அங்கு படப்பிடிப்பு நடத்த கூடாது என மாஸ்டர் படப்பிடிப்பை எதிர்த்து பாஜகவினர் போராடியதை அறிந்து ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் குவிந்தனர். தனக்கு ஆதரவாக நின்ற ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் நடிகர் விஜய் செல்பி எடுத்தார். அதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்தார். 
 
தற்போது இந்த பதிவு டிவிட்டரில் அதிகம் ரீடுவீட் ஆன பதிவுகளில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்பி முதலிடம் பிடித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லோகேஷ் படத்தில் கமலுக்கு வில்லன் இந்த நடிகரா? வெளியான மாஸ் அப்டேட்